• TRENDING | பர பர

அறிமுகம் : புதிய இ- சைக்கிள்! ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ ஓடும்!





இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் சைக்கிள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்திய நெக்ஸு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த எலக்ட்ரிக் சைக்கிள் ரோட்லர்க் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் சுதேசி தயாரிப்பான இந்த சைக்கிளை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரம் ஓடக்கூடியது என்பது சிறப்பம்சம் ஆகும். எலக்ட்ரிக் சைக்கிளாகும். இந்த சைக்கிள் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லக் கூடியது.

இந்த ரோட்லர்க் சைக்கிள் "இரட்டை பேட்டரி அமைப்பு" கொண்டுள்ளது, இதை உங்கள் வீட்டு சார்ஜ் சாக்கெட்டில் சார்ஜ் செய்யப்படலாம். இந்த சைக்கிளில் இரண்டு டிரைவிங் மோடுகள் உள்ளன.. Throttle மோடில் இயக்கினால் 75 கி.மீ தூரமும், பெடல்|மோடில் இயக்கப்படும் போது 100 கி.மீ தூரம் வரை இயங்கும்..

இதன் விலை 42,000 ரூபாய் ஆகும்

இதில் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள், மின்சார சைக்கிளின் ரேஞ்ச், பேட்டரி சார்ஜ் உள்ளிட்டத் தகவல்களை பெறுவதற்காக ஹேண்டில்பாரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் செல்லும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்க, எல்இடி ஹெட்லைட்டுகள் இந்த எலக்ட்ரிக் சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ளன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :