• JUST IN | சுட சுட

#BREAKING புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமனம்!





தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று கொண்டதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து முக்கிய ஐந்து கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதனிடையே முதல்வரின் செயலாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், எம்.எஸ் சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகிய 4 பேரும் முதல்வரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ள இறையன்பு நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர்.

தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

நேர்மையான திறமைமிக்க இறையன்பு அவர்கள் தலமை செயலாளர் பதவிக்கு மிக-மிகப் பொருத்தமானவர். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :