• TRENDING | பர பர

அன்னையின் ஆத்திச்சூடி!


- சியாமளா கேசவன், திருவனந்தபுரம்





அடுப்பில் போட்ட கடுகு வெடிப்பது போல்

கோபம் கொண்டு துள்ளிக் குதிக்காதே!

.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.

வரவு செலவை அறிந்து வாழ்ந்திடு.

.

இடிச்ச புளி போல் இருக்காமல்

சுறுசுறுப்புடன் இயங்கிடு.

.

ஈக்களில் தேனீக்களாக இருந்து

நல்லோரை நாடி நற்பண்பால் உயர்ந்திடு.

.

உப்பை போல் உலகில் உள்ளோரை

துல்லியமாக நேசித்து வாழ பழகிடு.

.

ஊராருக்கு உதவி கரம் நீட்டுவதால்

உடல் ஒன்றும் வெல்லம் போல் கரையாது!

.

எழிலான மனதை கொழம்பு போல் கொதிக்கவிடாமல்

தெளிவான ரஸமாக வைத்துக் கொள்!

.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

அனுபவ பாடத்தில் அறிந்திடு!

.

ஐந்துக்கு இரண்டு பழுதில்லையானால்

கவலையை விடு - சமாதானத்துடன்

பழுதில்லா இரண்டினை பற்றி கொள்!

.

ஒரு கை ஓசை ஒருபோதும் வராது

எனவே எதிர்வாதம் தவிர்த்திடு‘

.

ஓயாமல் ஆன்றோர் கூறும் அறிவுரை

நெல்லிக்கனி சுவைபோல்

ஒஃடதமாய் இனிய பயன் தரும்!

.

அன்னப் பறவை போல் நல்லது கெட்டதை

தரம் பிரித்து, பகுத்தறிவால் ஒளிர்ந்து

நல்வழியில் சென்று நற்குடிமகனாக

வாழ்ந்தால் - தாய்நாட்டுக்குப் பெருமை!

அதுவே அன்னைக்கும் பெருமை!

Comments

Mandakolathur Subramanian says :

. "எழிலான மனதை கொழம்பு போல் கொதிக்கவிடாமல் தெளிவான ரஸமாக வைத்துக் கொள்! - இந்த ஜோக் எனக்குப் பிடித்தது...ஏனெனில் நான் ஒரு ரசப்ரியன்! - "மணியன்"

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :