• TRENDING | பர பர

‘திராவிடத்தைச் சேர்ந்தவன்’ : மாற்றப்பட்ட மு.க. ஸ்டாலினின் ட்விட்டர் பக்கம்!





இன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், பதவியேற்றுள்ள நிலையில், அவரது டிவிட்டர் பக்கத்தின் சுயவிவரங்களும் மாற்றப்பட்டது.

அதில், தமிழக முதல்வர், திமுக தலைவர் என்று போடப்பட்டு, அதனுடன் Belongs to Dravidan Stock (திராவிடத்தை சேர்ந்தவன்) என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அதிமுக உள்பட பல கட்சிகளும் பதவி ஏற்கும்போது, கடவுள் மீது நம்பிக்கை வைத்து பதவி ஏற்பதுதான் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் மட்டுமே தனது தந்தை கலைஞரை கௌரவப்படுத்தும் விதமாகவும், திராவிடத்தை முன்னெடுக்கும் வகையிலும், கடவுள் மீது என்ற வார்த்தைக்கு பதிலாக, `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்` என்று கூறி பதவி ஏற்றுள்ளார். ஸ்டாலின் கூறிய அந்த வார்த்தையின் போது, அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது டிவிட்டர் பக்கத்தின் சுயவிவரங்களும் மாற்றப்பட்டுள்ளது. அதில், தமிழக முதல்வர், திமுக தலைவர் என்று சேர்க்கப்பட்டுள்ளதோடு, Belongs to Dravidan Stock (திராவிடத்தை சேர்ந்தவன்) என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :