• TRENDING | பர பர

சச்சினுக்கு பின் விக்கட் கீப்பராக இருந்து சாதித்த ரிஷப் பந்த்!





இந்திய கிரிக்கெட்டில் விக்கட் கீப்பராகவும் சிறந்த பேட்ஸ்மேனாகவும் கருதப்படும் ரிஷப் பந்த், தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சச்சினுக்கு அடுத்தபடியாக, 24 வயதுக்கு முன்பே சிறந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி டாப் 10இல் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். விராட் கோலி 814 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திலும், ரிஷப் பந்த் 747 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திலும், 747 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 8 ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கெதிராக ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் முறையாக 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்மூலம், இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்துக்குள் வந்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதோடு, 24 வயதுக்கு முன்பாகவே ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக, 24 வயதுக்கு முன், முதல் 10 பேர் பட்டியலில் நுழைந்த இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரிஷப் பந்த்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :