• TRENDING | பர பர

‘நமீதா தியேட்டர்ஸ்’ என்று புதிய ஓடிடி தளம் ஆரம்பித்தார் நடிகை நமீதா!





ஆரம்பத்தில் சில படங்களில் ஹீரோயினாகவும், அதன்பின் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்து, ரசிகர்களை ‘மச்சான்ஸ்’ என்று செல்லமாக அழைக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நமீதா.

பின்னர், ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் இணைந்த இவர், தற்போது பாஜகாவில் இருந்தபடியே, பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ‘நமீதா தியேட்டர்ஸ்’ என்ற ஓடிடி தளத்தை தற்போது ஆரம்பித்திருக்கிறார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘நமீதா தியேட்டர்ஸ்’ என்ற ஓடிடி தளம் அடுத்த மாதம் முதல் செயல்படவுள்ளது. அந்த ஓடிடி தளத்தில் உண்மை கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை வெளியிடவுள்ளதாகவும் நமீதா கூறியுள்ளார்.

இதனால், புது இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் பயனடைவார்கள் என்று கூறிய அவர், அதேபோல் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களும் இந்த ஓடிடி தளத்தில் தாங்கள் எடுக்கும் படத்தை வெளியிடலாம் என்றும் நமீதா கூறியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :