• TRENDING | பர பர

பென்ஸ் கார் வாங்கி கெத்து காட்டிய ஈரோடு மகேஷ்! விலை எவ்வளவு தெரியுமா?





விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர் ஈரோடு மகேஷ். அவர் தற்போது 67 லட்ச ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் வாங்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் தமிழ் பேச்சாளராகவும், மேடை பேச்சுகள் மூலமாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஈரோடு மகேஷ். சில காலங்களுக்குப் பின் விஜய் டிவியில் வெளியான காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பின்னர் படங்களிலும் வலம் வர ஆரம்பித்தார். கல்லூரி நிகழ்ச்சிகளிலும் பேச்சாளராகவும் பிரபலமானார். பேச்சாளராக ஒரு பக்கம் வலம் வந்தாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியான கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றினார்.

ஒருமுறை கல்லூரி நிகழ்ச்சியின் போது, தன் உறவினர் ஒருவர் காரில் தன் குடும்பத்தை அழைத்து சென்றதாகவும், பிறகு காரில் இடமில்லை என இவர்கள் இறக்கி விட்டதாகவும் கூறினார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இவர் கார் வாங்கும் போது எல்லாம் தன் உறவினருக்கு போட்டோ எடுத்து அனுப்பி வெறுப்பேற்றியதாகவும், ஒரு கட்டத்தில் கார் வாங்க பார்க்கும் போதுகூட தான் எடுக்கும் புகைப்படத்தை அனுப்பி வெறுப்பேற்றியதாகவும் கிண்டலாக கூறினார்.

இந்நிலையில், தனது அயராத உழைப்பால், 67 லட்ச ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் ஈரோடு மகேஷ். தற்போது அது சம்பந்தமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :