• தினம் ஒரு கஞ்சி

லவங்க குடிநீர் கஞ்சி

தேவை: லவங்கம் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் 1, நாட்டுச் சர்க்கரை (அல்லது) பனங்கற்கண்டு தூள் - 2 டேபிள்ஸ்பூன், பால் - 2 கப்.

செய்முறை: ஏலத்தை உரித்து ஏலரிசியை எடுத்துக் கொள்ளவும். லவங்கத்தை மொட்டு நீக்கி, இரண்டையும் வெறும் வாணலியில் லேசாக வறுத்து 2 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்தெடுக்கவும். பாலை 1 கப்பாக வரும் வரை வற்ற காய்ச்சவும். காய்ச்சிய பாலில் விழுது, சர்க்கரை கலந்து சற்று கெட்டியாக வரும்வரை காய்ச்சி இறக்கவும். பாஸந்தி போல் மணக்க, மணக்க சாப்பிடவும். ருசியாக இருக்கும்.

குறிப்பு: மழை, குளிர், பனி காலங்களில் சாப்பிட ஏற்றது. தொண்டைக்கு இதமளிக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :