• தினம் ஒரு கஞ்சி

ராகி கஞ்சி (ரிச்சானது)

தேவை: முழு கேழ்வரகு - ½ கப், தண்ணீர், பால் - தலா ½ கப், (அல்லது) மில்க் மெய்ட் 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை தேவைக்கு, ஏலத்தூள் - சிறிது.

செய்முறை: முழு கேழ்வரகை மண், கல், தூசு நீக்கி, வெறும் கடாயில் வறுத்து, மிக்சியில் ரவை போல் உடைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வறுத்த ரவையை கஞ்சிபோல் காய்ச்சவும். நன்றாக வெந்தது மேலே பளபள என்று தெரிந்தவுடன் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலம், மில்க்மெய்ட் கலந்து ஊற்றி கிளறி இறக்கி பருகவும். ரிச்சாக பருக விரும்பினால் வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா, திராட்சை கலந்து பருகலாம்.

குறிப்பு: பசியை ஆற்றும் திறன் கொண்டதுடன் சத்துகளும் அடங்கியது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :