• தினம் ஒரு கஞ்சி

பொட்டுக்கடலைக் கஞ்சி

தேவை: பொட்டுக்கடலை மாவு - 1 கப், பால் - 1½ கப், ஏலம் தூள் ½ டீஸ்பூன், நாட்டுச் சர்க்கரை - ருசிக்கு ஏற்றபடி.

செய்முறை: வாணலியை லேசாக சூடு செய்து மாவை 1 தரம் பிரட்டி எடுத்து கொள்ளவும். பின் இந்த மாவில் 2 ஸ்பூன் எடுத்து 1 தம்ளர் தண்ணீரில் கரைத்து கஞ்சியாகக் காய்ச்சி, பால், ஏலத்தூள், சர்க்கரை சேர்த்து கலந்து 1 கொதி வந்ததும் இறக்கி சற்று ஆறியவுடன் பருகலாம்.

குறிப்பு: புரோட்டீன் சத்து நிறைந்தது. வயதானவர்களுக்கும், கைக்குழந்தைகளுக்கும், பால் சற்றுகுறைவாக சேர்த்து கொடுக்கலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :