• தினம் ஒரு கஞ்சி

டூ இன் ஒன் கஞ்சி

தேவை: பார்லி, கொள்ளு - தலா ½ கப், புழுங்கல் அரிசி நொய், ஜவ்வரிசி, அவல் - தலா 1 டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி - ½ டீஸ்பூன், மோர் - 1 கப், உப்பு சிறிது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, எலுமிச்சை சாறு, மல்லித்தழை சிறிது.

செய்முறை: மேலே சொல்லப்பட்ட தானியங்களை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து ஆறவிட்டு மாவாக்கவும். அந்த மாவில் 3 டேபிள் ஸ்பூன் எடுத்து 1 தம்ளர் தண்ணீரில் கட்டியின்றி கரைத்து, மேலும் நீர் ஊற்றி கஞ்சியாகக் காய்ச்சவும். வெந்தவுடன் உப்பு, மோர், சுக்குப்பொடி, மிளகாய் துண்டுகள், எலுமிச்சை, மல்லித்தழை சேர்த்து கலந்து அருந்தவும்.

இனிப்பு தேவைப்படுபவர்கள் உப்பு, மோர், எலுமிச்சை, மிளகாய், மல்லித்தழை தவிர்த்துவிட்டு, ஒரு கப் பால், ஜாதிக்காய்ப்பொடி, ஏலப்பொடி, ஒரு துளி குங்குமப்பூ சேர்த்து பருகலாம்.

குறிப்பு: உடற்பயிற்சி போன்றவற்றால் இழந்த எடை கூடும். எடையைக் கூட்ட, குறைக்க என இரண்டுக்கும் இந்த கஞ்சி பயன்தரும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :