• தினம் ஒரு கஞ்சி

புழுங்கல் அரிசி நொய் லெமன் கஞ்சி

தேவை: வறுத்த புழுங்கல் அரிசி நொய் - ¼ கப், உடைத்த உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன், எலுமிச்சம்சாறு, இஞ்சிச் சாறு, உப்பு - தேவைக்கு ஏற்ப, விரும்பினால் மோர் - ¼ கப், தாளிக்க - நெய், சீரகம், கிள்ளிய கறிவேப்பிலை சிறிது.

செய்முறை: நொய்யுடன், உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து 4 கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். வெந்தவுடன் இஞ்சி, எலுமிச்சைாறு, உப்பு, மோர் சேர்த்து கலக்கவும். நெய்யில் சீரகம், கிள்ளிய கறிவேப்பிலைத் தாளித்து பருகவும்.

குறிப்பு: உடல் எடை கச்சிதமாக இருக்கவும், தேவையற்ற ஊளைச்சதையை குறைக்கவும் உதவும். உடலுக்கும் குளிர்ச்சி கொடுக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :