• GLITTERS | பளபள

காலியாகிறதா பொதுத்துறை நிறுவனங்கள்?!


ச.பாலசுப்ரமணியன்
பொதுத்துறை வங்கி ஊழியர் (ஓய்வு)

பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலானவற்றை தனியார்மயமாக்கும் முயற்சியில் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில். விமானசேவை, ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து,,எண்ணை நிறுவனங்கள், காப்பீட்டுத்துறை, வங்கிகள், இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம், கல்வி என எல்லாத் துறைகளிலும் தனியார் ஆதிக்கம் இன்று மேலோங்கி நிற்கிறது அல்லது அதற்கான வழிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.

பொதுத்துறை வங்கிகளும் இதற்கு விதிவிலக்கல்ல! பல பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொன்றாக இணைக்கப்படுகின்றன.. அல்லது தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதற்கான செய்திகள் வரத்தொடங்குகின்றன. இது பற்றி வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் சரியான புரிதல் ஏற்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை! இதுதொடர்பாக. வங்கி ஊழியர்களின் சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள், அவர்களது ஊதிய பிரச்சினைக்காக நடத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டு, மக்களால் புரிந்துக் கொள்ளப்படாமல் போயின. இன்று பொது மக்கள் இதனைச் சரியாகப் புரிந்துக் கொள்ளாமல், உதாசீனப்படுத்தினால், நாளை தங்களது சேமிப்புகளை இழக்க நேரும் சூழல் ஏற்படக்கூடும்.

இது எவ்வாறு நிகழக்கூடும் என்பது பற்றி சிறிது காண்போம்.

1969ஆம் ஆண்டுக்குமுன், வங்கிகள் தனியார் வசம்தான் இருந்தன. அச்சமயம் ஏராளமான தனியார் வங்கிகள் திவாலானதைக் கண்டு, AIBEA என்ற அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், (1946ஆம் ஆண்டு தொடங்கிய சங்கம்) வங்கிகள் தேசியமயமாக்கபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இதையடுத்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, 1969ல் வங்கிகள் தேசியமயமாக்குதல் சட்டத்தினைக் கொண்டு வந்தார். அதன்[படி முதலில் 14 பெரிய வங்கிகளையும், பின்னர் 1980ல் மேலும் ஆறு வங்கிகளையும் தேசியமயமாக்கினார். இதன் பின்னர்தான், வங்கிகள் கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கின. கிளைகள் பெருகத் தொடங்கின. சேமிப்புகசள் வளரத்தொடங்கின. தொழில் வளைர்ச்சிக்கான விதைகள் ஊன்றப்பட்டன. கடனுதவித் திட்டங்களின் பலன்கள் நாட்டுபுறத்தில் உள்ளவர்களுக்கும் கிடைக்கத்தொடங்கின. வேலைவாய்ப்புகள் பெருகின. வங்கி என்பது பெருந்தனக்காரர்களுக்கானது என்பது மாறி, சாமான்யர்களும் உரிமைக் கொண்டாடும் சேவை தளமானது. வங்கிகளும் அதனால் நாடும், மக்களும் பெற்ற வளர்ச்சி அபாரமானது.

நாடு சுதந்திரம் அடைந்தபோது நமது வங்கிகளில் மக்கள் சேமிப்பு என்பது ரூ1019 கோடியாகவும், கடன் என்பது ரூ414 கோடியாகவும் இருந்தன. தேசியமயமாக்கப்பட்டபோது அவை முறையே ரூ5000 கோடியாகவும், ரூ3500 கோடியாகவும் இருந்தன. 1969ல் வங்கிகள் நகரங்களில் மட்டுமே 8200 கிளைகளுடன் இயங்கி வந்தன. இன்று மொத்தம் 156329 கிளைகளுடன் (அவற்றில் 52463 நகரங்கள் அல்லாது கிராமங்கள் மற்றும் புறநகரங்களில்) ரூ138.50 லக்ஷம் கோடிகள் சேமிப்பு, ரூ101.83 லட்சம் கோடிகள் கடன் தொகையாகவும் கொண்டு மிகச் சிறப்பான சேவை புரிந்து வருகின்றன. முன்னுரிமைத் தொழில்களுக்கானக் கடன்கள் என்பது பூஜ்யத்திலிருந்து இன்று 40% ஆக வளர்ந்துள்ளது. இவை யாவும் தேசியமயமாக்கப்பட்டதன் விளைவே என்பதனை யாராலும் மறுக்க இயலாது. விவசாயத் தொழில் இன்று பெற்றுள்ள வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு மகத்தானாது. கல்விக் கடன்கள் தாராளமாக வழங்கப்படுவது பொதுத் துறை வங்கிகளில்தான் என்பது நினைவில் கொள்ளப்படவேண்டும்.

1990கள் வரை மிகச் சீரிய வளர்ச்சியுடன், இந்திய பொருளாதாரத்தினை மேம்படுத்திவந்த வங்கித்துறை, அரசின் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கையினால் தடுமாற்றத்தினை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவரை சிறப்பாக இயங்கி வந்த சில பாரம்பரிய தனியார் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்த நிலையில், தேவையற்ற முயற்சியாகப் புதிய தனியார் வங்கிகள் மிக்க ஆடம்பரத்துடன் துவக்கப்பட்டன.

பொதுத்துறை வங்கிகள் மீது, IMF மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நிர்ப்பந்தத்தினால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நமது பொருளாதாரத்திற்குச் சற்றும் பொருந்தாத புதிய கணக்கியல் மற்றும் தணிக்கை முறைகள் திணிக்கப்பட்டன. ஊழியர் சேர்க்கைக் குறைக்கப்பட்டது. அதே சமயத்தில், தனியார் வங்கிகள் பெரும் சுதந்திரத்துடன் இயங்கின. ஆயினும், பல்வேறு குளறுபடிகள், நிர்வாகக் கோளாறுகள், முறைகேடுகளால் அவற்றால் நிலைத்து நிற்க முடியாமல், நஷ்டம் அடைந்து, இறுதியில் அவற்றினைப் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்க வேண்டியதாயிற்று. அதன் மூலமே அவற்றின் வாடிக்கையாளர்களின் சேமிப்புகள் உத்திரவாதம் பெற்றன. அதுவரை அடைந்த இலாபங்கள் முதலாளிகள் பங்குக்குச் சென்ற்ன. நஷ்டம் வந்தவுடன், பொதுத்துறை வங்கிகள் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டன. இருப்பினும்,

இன்று வரை தனியார்மய மோகம் என்பது அரசுக்கு சற்றும் குறையவில்லை. இன்று நடைமுறையில் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகள்படி, எந்த வங்கியும் திவாலாகி மூடப்படாது; மற்றொரு வங்கியுடன் இணைக்கப்படும். பொதுத்துறை வங்கிகள் இந்தத் தனியார் வங்கிகளைக் காக்கும் செயலில் (பெயில்-அவுட்) ஈடுபடுத்தப்பட்டன.

1969க்கு பிறகு, இதுவரை சுமார் 35 தனியார் வங்கிகள் நலிவடைந்து பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன அல்லது பொதுத் துறை வங்கிகளால் காப்பாற்றப்பட்டு, வாடிக்கையாளர்களது சேமிப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இன்று, அரசு கொண்டு வர முயற்சிக்கும் பெயில் இன் (BAIL IN) முறை, சட்டமாக நிறைவேறினால், வாடிக்கையாளர்களது சேமிப்புகள் உச்சவரம்பிற்கு உட்படுத்தப்படும். அதாவது வாடிக்கையாளர்கள் தம் கணக்கிலிருந்து குறிப்பிட்டத் தொகை மட்டுமே எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மீதியுள்ளவை பங்குகளாக மாற்றப்படலாம் அல்லது வழங்கப்படாமல் தவிர்க்கப்படலாம்.

’யெஸ்’ பேங்க் பிரச்சினையில், SBI வங்கிதான் வழிகாட்டியது. பாரம்பரியமிக்க ’லட்சுமி விலாஸ் வங்கி’யில் சில தவறுகள் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டபோது, ரிசர்வ் வங்கியும் சரி, அரசும் சரி அதனை அலட்சியப்படுத்தின. இன்று, அந்த ’லட்சுமி விலாஸ் வங்கி’ அடிப்படையில் வலுவாக இருந்த போதிலும், உதவிக்கரம் நீட்டப்படாமல், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் விருப்பத்திற்கு மாறாக, ஒரு அன்னிய வங்கிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. ஒற்றை இலக்கத்தில் கிளைகள் கொண்ட இந்த DBS வங்கி, இப்போது ‘லட்சுமி விலாஸ் வங்கி’யுடன் இணைந்ததன் மூலமாக, ஐநூறுக்கும் மேற்பட்டக் கிளைகள் கொண்டதாக மாறிவிட்டது!

இன்று வங்கிகள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நஷ்டத்திற்கான காரணகர்த்தர்கள் யாரென்று ஆராய்ந்தால், பெரும் தனியார் நிறுவனங்கள்தான் என்பது தெளிவாகப் புரியும். வாராக்கடன்கள் என்ற மிகப் பெரும் மோசடி வங்கித்துறையில் மெதுவாகத் தலைதூக்க ஆரம்பித்த போதே வங்கி ஊழியர்கள் அதனை உணர்ந்து, எசசரிக்கை மணியடித்தனர். பெருமுதலாளிகளின் ஆதரவு வேண்டி நின்ற அனைவரும் இவற்றை அலட்சியம் செய்தனர். மிகச் சரியாகத் திட்டமிட்டு, இணைந்து காய்களை நகர்த்தத் துவங்கினர்.

சில ஆயிரம் கோடிகளாக இருக்கும்போதே, AIBEA துணிந்து, வாராக்கடன் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டது. இதன் காரணமாகச் சங்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டனவே தவிர, கடன்களை வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை. மாறாக, கடனைக் கட்டாமல் நஷ்டக் கணக்குக் காட்டும் நிறுவனத்தின் பங்குதாரராக வங்கிகளும் இடம் பெற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அவை நஷ்டத்தினை அதிகப்படுத்தவே வழிவகுத்தன. இன்று, பெருவணிக நிறுவனங்கள், வங்கித் தொடங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிமை இல்லாத வங்கிகளிலிருந்து பெறும் கடனையேத் திருப்பித்தராமல் இழுத்தடிக்கும் பெருமுதலாளிகள், தாங்களே வங்கியின் அதிபர்கள் ஆனார்கள் என்றால், நிலமை என்னாகும் எனு யோசித்துப் பாருங்கள்! பொதுமக்களின் சேமிப்புகள் என்னவாகும்? அவர்களே, கடன் வழங்குபவர்களாகவும், கடன் பெறுபவர்களாகவும் இருந்தால், கடன் வசூலாகுமா? தேசியமயமாக்குவதற்கு முன்பிருந்த நிலைக்கு வங்கிகள் திரும்புவதற்கே வழிவகுக்கும்! திவால்கள் தினசரி செய்திகளாகும்; மக்கள் பணம் சூறை போகும். விபரீத விளையாட்டாக முடியும். இது உறுதியாக எதிர்க்கப்படவேண்டிய நடவடிக்கை.

வங்கிகளின் இயக்குனர் குழுவில், ஊழியர் மற்றும் அதிகாரிகளின் பெரும்பான்மைத் தொழிற்சங்கங்கள் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதி வீதம் இருவருக்கு நியமன இடம் உண்டு. ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்விடங்களுக்கு எவரும் நியமனம் செய்யப்படவில்லை!

தற்போது வகுக்கப்பட்டுள்ள IBC Act, கடன் தொகையில் பெரும் பகுதியினைத் தள்ளுபடி செய்து, சொற்பத்தொகையினை மட்டும் வசூலித்துக் கொள்ள வழி வகுத்துள்ளது. இது குற்றவாளிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்து விட்டது! ‘வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களை கிரிமினல் குற்றம் புரிந்தவர்களாக அறிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையும் இதுவரை ஏற்கப்படவில்லை. இவர்களது பெயர்களை வெளியிடவும் தயக்கங்கள் நிலவுகின்றன. இதுபோன்ற வாராக் கடன்கள் காரணமாக அனைத்து வங்கிகளும் நிகர நஷ்டத்தினையே இறுதியில் காட்டுகின்றன. எந்த ஒரு பொதுத்துறை நிறுவனமும், மற்றொரு பொதுத் துறை நிறுவனத்தால் நஷ்டம் அடைவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். அப்படியிருக்க, நஷ்டம் ஏற்படுத்திய தனியாரை விட்டு, பொதுத்துறை நிறுவனங்களைச் சாடுவதும், மூடுவதும் எவ்வகையில் நியாயம்?

பொது மக்கள் பாதுகாப்புக் கருதி வங்கிகளில் சேமிக்கும் தொகைகள் இப்படி வாராக்கடன்களாக மாறினால் என்னவாகும்? ஏற்கனவே இதன் பாதிப்புகள் வட்டிக்குறைப்பு, அதிகரிக்கும் சேவைக் கட்டணங்கள் என உருவெடுத்துள்ளன.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்ல.. மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் பலவும்கூட தனியார்துறைக்கு கைமாற்றப்படும் சிக்கலில் மாட்டிகொண்டு தவிக்கின்றன.

விமான நிலையப் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவு எடுத்தபோது, விமான நிலைய AAIஇல் பணியாற்றும் ஊழியர்கள் அதனை எதிர்த்தனர். அவற்றினால் ஏற்படக்கூடிய பாதகங்களை எடுத்துக்கூறி போராடினர். அரசு செவி மடுக்கவில்லை. இன்று, அப்பராமரிப்புப் பணியைச் செய்யும் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் CBI மற்றும் ED-இன் விசாரணை வ்ளையத்திற்குள் வந்துள்ளன. அரசுக்கு பெரும் தொகையை ஈவுத்தொகையகையாக வருடாவருடம் வழங்கும் LIC இன்று விற்கப்படுகிறது. BPCL நிறுவனம் மிக லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனம். அதுவும் தனியார் கைக்கு நகர்த்தப்படுகிற்து. இரயில் நிலையங்கள், இரயில்கள் எல்லாம் தனியாருக்கு. ஏற்கனவே மருத்துவம், கல்வி, போக்குவரத்து, சாலைகள் போன்றவற்றில் தனியாருக்குத்தான் முன்னுரிமை. ஏனென்றால். இவற்றை நடத்துவது அரசு வேலையல்ல என்று மிகக் கற்றவர்கள் காரணம் கூறுவர். ஆனால், ஒரு விஷய்த்தை உணர வேண்டும்..

கடந்த 2007-08ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் சப்-ப்ரைம் நெருக்கடி ஏற்பட்டு, உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியினைச் சந்தித்தபோது, நமது நாடு அதிலிருந்து தப்பியதற்கு காரணம் - நமது பொதுத் துறை வங்கிகளின் வலுவான அடித்தளமே என்று அனைத்து பொருளாதார வல்லுனர்களும், அன்றைய நிதியமைச்சரும் பெருமிதமாகக் கொண்டாடினர்.

தனியார் மயம் என்பது சர்வரோக நிவாரணி அல்ல! இன்று நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் பொதுத்துறை நிறுவனங்கள், அனைத்துக் கட்டமைப்புகளும் கொண்டு, சிறப்பான நிலையில் இருப்பதனால் மட்டுமே, தனியார் அவற்றினை வாங்குவதற்குத் தயாராக உள்ளனர்! நஷ்டம் ஏற்படும் தொழிலில் முதலீடு செய்ய எந்த தனியார் நிறூவனமும் தயாராக இருக்குமா? கண்டிப்பாக லாபம் கிடைக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்!

பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கிடைத்த லாபங்கள்தான் அரசின் நலத்திட்டங்களுக்கு இத்தனை காலமும் உதவி வந்துள்ளன என்பது மறக்கலாகாது. அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் அரசு நிறுவனங்களுக்குத்தான் பெரும் பொறுப்பு உள்ளது. அவை தழைப்பதில்தான் மக்கள் நலம் அடங்கியுள்ளது. அனைவரும் இதனை உணர வேண்டும். தனியார்மயம் தடுக்கப்படவேண்டும்.
Comments

Narayanan R says :

இவையெல்லாம் உண்மை

Ganesan says :

An excellent portrayal of the current situation. Well analysed. Mindless privatisation will doom the economy itself in the long run.

Ganesan says :

An excellent portrayal of the current situation. Well analysed. Mindless privatisation will doom the economy itself in the long run.

Ananthakrishnan says :

Excellent analysis .each bankmen should read and spread.also pamphlets should be issued

Sudha Balasubramanian says :

It is 100% true hard to digest . By privatising all down trodden people and middle class people savings will be affected

N RAVIKUMAR says :

Explained in simple and understandable by common man. Fantastic sir

K PALANI KUMAR says :

முற்றிலும் உண்மையான,சிறப்பான பதிவு. AIBEA is the only trade union in the Banking Sector always fighting to save the public sector as well as the savings of the Indian public.

Saratha VIVEKANANDAN says :

அரசியல்வாதிகளின் ஆதாயத்திற்காக ஏழ்மை நிலையில் உள்ள பொது மக்களின் பணம் மற்றும் நம்பிக்கை சூறையாடப்பட்டு வருகிறது.

Raghunathan says :

அருமையான பதிவு. இதைவிட எளிமையாக எழுத முடியாது. பாராட்டுக்கள் ரகுநாதன்

Apsara begam n says :

உண்மை நிலையைஉரக்க சொல்லியிருக்கிறார் இதை உணர்ந்து செயல்பட்டால் மாற்றம் நிச்சயமாக கிடைக்கும்

Balaji says :

Very nice and true article.

Sairamesh says :

விரிவான சரியான புள்ளி விவரங்கள் அடங்கிய தெளிவான பதிவு. தோழருக்கு வாழ்த்துக்கள்.

Sairamesh says :

விரிவான சரியான புள்ளி விவரங்கள் அடங்கிய தெளிவான பதிவு. தோழருக்கு வாழ்த்துக்கள்.

M A Srinivasan says :

அறபுதமான கட்டுரை. மிகநேர்த்தியாக கடந்த கால நிகழ்கால மற்றும் எதிர் காலத்தையும் பற்றிய கட்டுரை

Ramakrishnan says :

சிறந்த எழுத்து. சரியான கருத்துக்கள்

S asha lakshmi says :

Very well explained and should make it known to the public also

Suriyamoorthy says :

Evils of Privatization naratted in a simple manner.

H.Gurunathan says :

Very well explained .even after releasing the names of big business houses who defaulted bank loans byAIBEA (bank workers union),government want to privatize and pamper corporates. Thanks for bringing this writeup and it should reach common public.

Ramdass says :

மிக அருமையான மற்றும் சிறப்பான கட்டுரை பொதுத்துறையின் சிறப்பையும் அ இ வ ஊ சங்கத்தால் வங்கிகள்பொதுத்துறை யானதை நன்றாக விளக்கியுள்ளார். பொதுமக்களுக்கு சென்று அடையவேண்டும் .

Ramdass says :

மிக அருமையான மற்றும் சிறப்பான கட்டுரை பொதுத்துறையின் சிறப்பையும் அ இ வ ஊ சங்கத்தால் வங்கிகள்பொதுத்துறை யானதை நன்றாக விளக்கியுள்ளார். பொதுமக்களுக்கு சென்று அடையவேண்டும் .

Ramdass says :

மிக அருமையான மற்றும் சிறப்பான கட்டுரை பொதுத்துறையின் சிறப்பையும் அ இ வ ஊ சங்கத்தால் வங்கிகள்பொதுத்துறை யானதை நன்றாக விளக்கியுள்ளார். பொதுமக்களுக்கு சென்று அடையவேண்டும் .

Ramdass says :

மிக அருமையான மற்றும் சிறப்பான கட்டுரை பொதுத்துறையின் சிறப்பையும் அ இ வ ஊ சங்கத்தால் வங்கிகள்பொதுத்துறை யானதை நன்றாக விளக்கியுள்ளார். பொதுமக்களுக்கு சென்று அடையவேண்டும் .

Usha viswansthan says :

Superb article. Eye opener

Usha viswansthan says :

Superb article. Eye opener

Srinivasan says :

Very great analysis of the effects of Nationalisation and the ills of mindless privatisation. I have read some other articles by the author published in other newspaper. author, These were also of important topics and were nice. These we

Jayashree Raman says :

அருமையான கட்டுரை. மக்களை சென்றடைய வேண்டிய உண்மைகளை தெளிவாக எடுத்துரைத்தமைக்கு வாழ்த்துக்கள்

V R Nagarajan says :

History repeats its story. But people should think how the economy grows. Then only We can avoid the bureaucracy and go for democratic developments. Otherwise India will still be a growing economy and still we have to go back to 1969.

K Ramaswamy says :

Very nice analysis of facts leading to privatisation of banks and its after effects. Explained in a simple manner avoiding jargons. Keep it up.

கே ஆர் எஸ் சம்பத் says :

செவிடன் காதில் ஊதிய சங்கு போல இன்றி , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்.

Viswanathan says :

Very correct analisis

சகா says :

அதிகார மாற்றம் ஒன்றே அனைத்திற்கும் தீர்வு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :