• தினம் ஒரு கஞ்சி

சுக்கு, மிளகு, தனியா ஊறல் கஞ்சி (இரு முறையில்)

தேவை: தனியா, மிளகு, சுக்கு தலா - 10 கிராம், ஏலக்காய் - 8, திப்பிலி - 6 எண்ணம், வெந்து எடுத்த பாம்பே ரவை - ¼ கப், மோர், உப்பு மட்டும்.

செய்முறை: தனியா, மிளகு, சுக்கு, ஏலக்காய், திப்பிலியை லேசாக வறுத்து ஒன்றிரண்டாகத் தட்டி 4 கப் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிட்டு 2 கப் ஆனவுடன் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை மூடி வைக்கவும். சத்து இறங்கினால் சுவை அதிகமாக இருக்கும். மேலே தெளிந்து நிற்கும் நீரை வடித்து வெல்லம், பால் சேர்த்துக் குடிக்கவும். இதையே 2, 3 முறை நீர் விட்டு கொதிக்கவிட்டும் அருந்தலாம். ஆனால், தெளிந்த நீரை கொதிக்கவிட்டு, பாம்பே ரவையை வறுத்து போட்டு, கட்டியின்றி கலந்து வேக விட்டு, உப்பு, மோர் சேர்த்தோ, அல்லது பால், பனங்கல்ண்டு சேர்த்தோ சாப்பிடலாம்.

இரண்டாவது செய்முறை: எல்லாவற்றையும் வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் 2 லவங்கம் சேர்த்து மிக்ஸியில் பொடித்து, வெந்நீர் 1 கப் எடுத்து கலக்கி கொதிக்க வைத்து ஆறியபின் விரும்பிய சுவையுடன் பருகி மகிழலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :