• தினம் ஒரு கஞ்சி

நீராகாரக் கஞ்சி

தேவை: இரவில் தண்ணீர் ஊற்றிய பழைய சாதம் நீருடன் சற்று புளிப்பு நீர் - 1 கப், உரித்த சின்ன வெங்காயம் - 7, 8, உப்பு, காயம், தாளிக்க - எண்ணெய், கடுகு - தலா 1 டீஸ்பூன், மோர் மிளகாய் - 4.

செய்முறை: வெங்காயத்தை சன்னமாக நறுக்கவும். பழைய சாதத்தை அந்த நீர் சேர்த்து மைய கரைக்கவும். உப்பு, மோர், காயம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து எண்ணெயில் கடுகு, மோர் மிளகாய் தாளித்துக் கொட்டி பருகலாம். வெயிலுக்கு ஏற்றது. வயிற்றுக்கும் இதம்.

குறிப்பு: மண்பாத்திரத்தில் சாதம் தண்ணீர் விட்டு வைத்து மறுநாள் காலையில் கரைத்து சாப்பிட்டால் ருசி + குளிர்ச்சி. செலவே இல்லாத எளிய கஞ்சி. அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இதுதான்!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :