• தினம் ஒரு கஞ்சி

அரிசி நொய் கஞ்சி (வெஜ் கலவையுடன்)

தேவை: பச்சரிசி நொய் + புழுங்கல் அரிசி நொய் - தலா 3 டேபிள் ஸ்பூன், துருவிய காய்கறிகள், (கேரட், வெங்காயம், 1 கோஸ் இலை, வாழைத்தண்டு, சன்னமான வெட்டிய பீன்ஸ் துண்டுகள் எல்லாம் சிறிது, உப்பு, காயம், மல்லித்தழை, சிறிது மோர் - 1 கப், எண்ணெய் - வதக்க 1 ஸ்பூன், தாளிக்க, சீரகம், கறிவேப்பிலை சிறிது.

செய்முறை: கனமான வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்களை வதக்கி எடுக்கவும். பின் இரு நொய்களையும் வறுத்துக் கொண்டு, 4 தம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டியின்றி வேக விடவும் (குக்கர் வேண்டாம்) ரவைகள் வெந்தவுன் வதக்கிய காய்கள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு உப்பு, காயம், மல்லித்தழை சேர்த்து, மோர் விட்டு இறக்கவும். வாணலியில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து அருந்தவும்.

குறிப்பு: வயிற்றுக்கு இதமும், குளிர்ச்சியும் தந்து ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் தருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :