• தினம் ஒரு கஞ்சி

பார்லி, ஜவ்வரிசி கஞ்சி

தேவை: பார்லி அரிசி - ½ கப், ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன், பால் - 2 கப், நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு பொடி - ருசிக்கு ஏற்ப, ஏலத்தூள், ஜாதிக்காய் தூள் சேர்த்து - ¼ டீஸ்பூன், மோர் - 1 கப், உப்பு, இஞ்சித் துருவல், இருசொட்டு எலுமிச்சைசாறு, கேரட் துருவல், மல்லித்தழை - தேவைக்கேற்ப.

செய்முறை: வெறும் வாணலியில் ஜவ்வரிசியை பொரித்துக் கொண்டு, அதே சூட்டில் பார்லியை வறுத்து எடுத்து ஆறவிட்டு மிக்சியில் இரண்டையும் பொடித்துக் கொள்ளவும். இந்த பொடியில் 2 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொண்டு, தேவையான நீர் சேர்த்து கஞ்சியாகக் காய்ச்சவும். ருசிக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது கல்கண்டுப்பொடி, ஏலம் + ஜாதித் தூள், பால் சேர்த்து அருந்தவும். இனிப்பு வேண்டாம் என்றால் மோர், உப்பு, இஞ்சித் துருவல், எலுமிச்சைச்சாறு, மல்லித்தழை கேரட் துருவல் சேர்த்து கலக்கி பருகலாம்.

குறிப்பு: காய்ச்சல், காலில் வீக்கம் உடையவர்களுக்கு நீர் பிரிய ஏற்றது. நீர் தாரை எரிச்சல் நீங்கும். வாய்க்கு ருசி + ஆரோக்கியம் கிடைக்கும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :