• தினம் ஒரு கஞ்சி

ஆரோ ரூட் மாவு கஞ்சி

தேவை: ஆரோ ரூட் மாவு - 1 டேபிள் ஸ்பூன், பால், நாட்டுச் சர்க்கரை அல்லது புளித்தமோர், உப்பு, இஞ்சித் துருவல், மல்லித்தழை, காயம் கலந்து சிறிது.

செய்முறை: இளஞ்சூடான நீரில் மாவை கட்டியின்றி கரைத்து மேலும் 1லீ தம்ளர் தண்ணீர் சேர்த்து கஞ்சியாக வேக விடவும். பளபளவென்று வெந்து வரும். பால், நாட்டுச் சர்க்கரை சேர்த்தோ, புளித்த மோர், இஞ்சி துருவல், உப்பு, காயம், மல்லித்தழை கலந்தோ ருசிக்கலாம்.

குறிப்பு: ஜீரணத்திற்கு ஏற்றது. வயிற்றுப் புண், வயிற்று நோய், அடிக்கடி மலம் கழிதல் போன்றவற்றிற்கு இந்த கஞ்சி ஏற்றது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :