• தினம் ஒரு கஞ்சி

பனங் கிழங்கு மாவு கஞ்சி

தேவை: பனங் கிழங்கு - 5, 6, பால் அல்லதுமோர் - 1 கப், உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரை - ருசிக்கேற்ப.

செய்முறை: பனங்கிழங்கை மண் போக நன்றாக அலம்பி வேக விட்டு எடுக்கவும். பின் தோல் நடுவில் உள்ள நரம்பு எடுத்து சிறுசிறு துண்டுகள் செய்து வெயிலில் நன்கு காய வைத்து மாவாக திரித்துக் கொள்ளவும். சலித்துக் கொள்ளவும். தேவைப்படும்பொழுது 2 ஸ்பூன் அல்லது 3 ஸ்பூன் மாவை 1 தம்ளர் தண்ணீரில் கரைத்து மேலும் நீர் சேர்த்து கஞ்சியாக காய்ச்சவும். நன்கு வாசனை வந்து சேர்ந்து கொதித்தவுடன் இறக்கி பால், சர்க்கரை அல்லது மோர், உப்பு சேர்த்து பருகவும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :