• தினம் ஒரு கஞ்சி

நேந்திரங்காய் கஞ்சி

தேவை: நேந்திரங்காய் - 2, பால் - 1 கப், பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை - தேவைக்கு, ஏலத்தூள் - சிறிது.

செய்முறை: நேந்திரங்காயை தோல் நீக்கி வட்ட வடிவ வில்லைகளாக நறுக்கி, வெயிலில் காய வைத்து எடுக்கவும். கஞ்சியை தயார் செய்ய நினைக்கும்போது சில வில்லைகளை மிக்ஸியில் அடித்து மாவாக்கி 2 கப் தண்ணீரில் கலந்து காய்ச்சவும். பால், சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து சூடாக அருந்தலாம்.

குறிப்பு: சத்துள்ள உடல் தேற்றும் ருசியுள்ள கஞ்சி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :