• தினம் ஒரு கஞ்சி

வீட், பீட்ரூட் கஞ்சி

தேவை: முழு சம்பா கோதுமை ரவை - 100 கிராம், சீரகத் தூள், உப்பு, நெய் - கொஞ்சம், பீட்ரூட் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தக்காளிச்சாறு - ¼ கப், குறுக்காக வெட்டிய பச்சை மிளகாய் - 1, மோர் - 1 கப்.

செய்முறை: வெறும் வாணலியில் கோதுமை ரவையை வாசனை வரும் வரை வறுத்து மிக்ஸியில் மாவாக்கிக் கொள்ளவும். பீட்ரூட் துருவலை நெய்யில் சுருள வதக்கி எடுத்து வைக்கவும். கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து கிளறவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு, மீதி நெய், சீரகத்தூள் சேர்த்து கிளறவும். கஞ்சி வெந்து தளதளவென்று கொதித்தவுடன் பீட்ரூட் துருவல் சேர்த்து மோர் கலந்து பருகவும். இனிப்பு தேவைப்படுவோர் உப்பு, மோர், இஞ்சித் துருவல், மிளகாய் தவிர்த்து, நெய், சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து பால், கருப்பட்டி சேர்த்து பருகலாம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :