• TRENDING | பர பர

த்ரிஷா திருமணம் குறித்து பிரபல நடிகை வெளியிட்ட தகவலால் பரபரப்பு!





நடிகை த்ரிஷாவின் திருமணம் பற்றி பிரபல நடிகை ஒருவர் சூசகமாக வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 19 வருடங்களாக தமிழ், தெலுங்கு என கதாநாயகியாக நடித்து கொடி கட்டி பறப்பவர் நடிகை த்ரிஷா. ரஜினி, கமல், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி கதாநாயகர்களோடும் ஜோடியாக நடித்து இன்றளவும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர். அவரது நடிப்பில் சமீபத்தில் ‘பரமபதம்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இவரின் கைவசம் ‘பொன்னியின் செல்வன்’ ‘கர்ஜனை’ ‘சதுரங்கவேட்டை 2’ உட்பட இன்னும் சில படங்கள் உள்ளன.

சமீபத்தில்தான் இவர் தனது 38வது பிறந்தநாளை மிக எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடிய த்ரிஷாவுக்கு, பிரபல நடிகை சார்மியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த அந்த வாழ்த்துச் செய்தியில், த்ரிஷா கடைசியாக பேச்சுலராக கொண்டாடக்கூடிய பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும் என அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் மூலம், த்ரிஷா விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை சூசகமாக சார்மி தெரிவித்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

நடிகை சார்மி வெளியிட்டுள்ள இந்த பதிவு சோஷியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களும் இப்போதே திரிஷாவுக்கு வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தகவலை பதிவிட்ட நடிகை சார்மியும், த்ரிஷாவும் நீண்டகால தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :