• TRENDING | பர பர

உலகின் மிகப்பெரிய மாம்பழத்தை அறுவடை செய்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதியினர்!





தற்போது கோடை காலத்தில் மாம்பழ சீசன் ஆரம்பித்த அதே நேரத்தில், ஒரு விவசாய தம்பதியினர், உலகின் மிகப்பெரிய மாம்பழத்தை அறுவடை செய்து கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளனர்.

கொலம்பியாவின் குயாட்டா என்ற பகுதியில் வசிக்கும் ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா மற்றும் ரெய்னா மரியா மரோக்யூன் என்ற விவசாய தம்பதியினர் வளர்க்கும் மாமரத்தில் கிடைத்த ஒரு மாம்பழத்தின் எடை 4.25 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான மாம்பழம், போயாகா பகுதியில் உள்ள சான் மார்டினில், ஏப்ரல் 29 அன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

இதற்கு முன்னதாக பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட 3.435 கிலோ எடை கொண்ட மாம்பழத்தின் சாதனையை தற்போது இந்த மாம்பழம் முறியடித்துள்ளது.

இது குறித்து கின்னஸ் உலக சாதனைகளுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜெர்மனின் மகள் தாங்கள் அறுவடை செய்த மாம்பழத்தின் அளவு பெரிதாக இருப்பதை உணர்ந்து, உலக பதிவுகள் குறித்து இணைய தள பக்கங்களில் ஆராய்ச்சி செய்துள்ளார். அந்த சேகரிப்பின் படி, அவர்களின் மாம்பழத்தை எடைபோட்டு பார்த்துள்ளனர். அதில் ஏற்கனவே உலக சாதனை படைத்த மாம்பழத்தை விட தங்களுடைய மாம்பழமே உலகிலேயே அதிக எடையுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்பின்னர், இந்த தகவலை, கின்னஸ் உலக சாதனை அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கின்னஸ் உலக சாதனைக்கு ஜெர்மன் தெரிவிக்கையில், "இந்த விருதானது, எங்கள் கிராமப்புறங்களின் முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் இயற்கையின் மீதான அன்பு ஆகியவற்றை எங்கள் பெற்றோர் எங்களுக்கு வழங்கியதை அங்கீகரிக்கிறது" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்த முழு மாம்பழத்தையும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டார்கள் என்று ஜெர்மன் கூறியுள்ளார்.

twitter link : : https://twitter.com/GWR/status/1387834887613341702

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :