• TRENDING | பர பர

ஏ.ஆர். ரஹ்மான் ஆல்பம் பாடலில் நடிக்கிறார் டிக்டாக் புகழ் கேப்ரியல்லா!





டிக் டாக்கின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்து பிரபலமானவர் கேப்ரியல்லா செல்லஸ். அதன்பின்னர் 2019-ல் வெளியான ‘ஐரா’ படத்தில் நயன்தாராவின் இளம் வயது கேரக்டரில் நடித்து சினிமாவிலும் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் கேப்ரியல்லா செல்லஸ், இன்ஸ்டாவில் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்களைக் கொண்டுள்ளதோடு, தற்போது, சின்னத்திரையில் `சுந்தரி` சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் புதிய ஆல்பத்தில் `மூப்பில்லா தமிழ் தாயே` என்ற பாடலுக்கு நடிக்கும் வாய்ப்பு கேப்ரியல்லாவுக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆல்பம் பாடலில் குழந்தை பாடகரான பூவையாரும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :