• TRENDING | பர பர

தெலுங்கானா: ட்ரோன் மூலம் கொண்டு செல்லப்படும் கொரோனா தடுப்பூசி!





கொரோனா தடுப்பூசியை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ட்ரோன் மூலம் கொண்டு செல்வதற்கான அனுமதியைத் தெலுங்கானா அரசுக்கு மத்திய விமானத்துறை வழங்கி உள்ளது.

கொரோனாவின் 2-வது அலை இந்தியாவை பெருமளவில் உருக்குலைத்து வருகிறது. நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா அரசுக்கு ஒரு முக்கிய அனுமதியை, மத்திய விமானத்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்வதற்கான சோதனைக்கு தெலுங்கானா அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் முதலில் எந்த கொரோனா தடுப்பூசிகள் ட்ரோன் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றால் இது ஒரு சிறப்பான துவக்கமாக அமையும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :