• TRENDING | பர பர

கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கம்!





பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுளளது. விதிமுறைகளை மீறியதால், அவரது டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டின் பிரபல நடிகையாக அறியப்படுபவர் கங்கனா ரனாவத். பாலிவுட்டில் ‘தனு வெட்ஸ் மனு’, ‘குயின்’ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ‘குயின்’ படத்தில் நடித்தற்காகச் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார்.

தமிழில் இயக்குநர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ‘தலைவி’ படத்தில் தற்போது நடித்துள்ளார். இப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மேற்கு வங்க தேர்தலுக்குப் பின்னர் நடந்த வன்முறைகளைப் பற்றி தொடர்ச்சியாக ட்வீட் செய்தார். அதோடு, மம்தா பானர்ஜியின் வெற்றியை விமர்சிக்கும் வகையில் மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, ட்விட்டர் விதிமுறைகளை நடிகை கங்கனா ரனாவத் மீறியதாகக் கூறி, அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :