• TRENDING | பர பர

ஹவாய் தீவில் 600 ஏக்கர் நிலம் வாங்கிய பேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க்!





சமூக வலைதளத்தில் முதன்மை வகிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். மேலும் 391 கோடிக்கு இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவருக்கு ஏற்கனவே ஹவாயில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்கும் நிலையில், தற்போது மேலும் 600 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இதனால் ஹவாயில் மட்டும் இவருக்கு மொத்தம் ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இவரது கைவசம் இருக்கும் இந்த நிலமானது, ஹவாய் தீவில் உள்ள கடற்கரைக்கு முன்னால் உள்ள நிலத்தை உள்ளடக்கியது எனவும் சொல்லப்படுகிறது. வயோலி கார்ப்பரேஷன் நிறுவனத்திடமிருந்து இதை மார்க் வாங்கியுள்ளாராம்.

இது சம்பந்தமாக மார்க் வெளியிட்டுள்ள பதிவில், நிலையான விவசாயத்தை உற்பத்தி செய்வதற்காகவும், பூர்வீக வனவிலங்குகளை பாதுகாப்பதற்காகவும் நாங்கள் எங்கள் ஊழியர்களுடன் சேர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து வயோலி நிறுவனத்தின் தலைவர் சாம்ராட் தெரிவித்ததாவது:

மார்க்கும், அவரது மனைவி பிரிஸ்கில்லாவும் பொறுப்பானவர்களாக செயல்படுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். ஏற்கனவே இவர்கள் வாங்கிய 750 ஏக்கர் பரப்பளவில் 357 ஏக்கர் கரும்பு தோட்டமும், 393 ஏக்கர் நிலம் பீட்ச் ஆகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் தற்பொழுது உள்ள இடத்தையும் நல்ல முறையில் பராமரிப்பார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :