• JUST IN | சுட சுட

மெக்ஸிகோ: ஓடுதளம் உடைந்து சாலையில் விழுந்த மெட்ரோ ரயில்! பலர் உயிரிழப்பு!





வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்ததால், அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் பலர் உயிரிழந்தனர்.

மெக்ஸிகோவில் நேற்று நள்ளிரவு 12 வது மெட்ரோ ஓடுதள பாதையில் மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தது. அச்சமயம் திடீரென்று ஓடுதளம் நொறுங்கி விழுந்ததால், ரயில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 13 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் எனவும் 70 நபர்கள் காயமுற்றிருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து கேள்விபட்ட மெக்ஸிகோ நகரின் மேயர் கிளாடியா ஷெய்ன்பாம் நிகழ்விடத்திற்கு விரைந்தார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

இறைவா????????????

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :