• SPARKLES | மினுமினு

சமுத்திரக்கனியின் அருமையான நடிப்பில் ‘ரைட்டர்’ படம்!


- ராகவ் குமார்





காவல் துறையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் படம் ‘ரைட்டர்”! டைரக்டர் பா. ரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவியாளராக இருந்த ப்ராங்கிளின் டைரக்ஷனில் வெளியாகியுள்ள இந்த படத்தில் ரைட்டராக வெளுத்து வாங்குகிறார் நடிகர் சமுத்திரக்கனி.

காவல் நிலையங்களில் ரைட்டர் - அதாவது எழுத்தரின் பங்கு மிக முக்கியமானது. போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வரும் நபர்களிடம் கேட்டு புகார்களை எழுதுவதும், இன்ன பிற எழுத்து வேலைகளை செய்வதும் ரைட்டரின் வேலை. ஒரு வழக்கின் தன்மை இந்த எழுத்தர் எழுதும் விஷயத்தில்தான் உள்ளது. அதிகம் நமக்கு தெரியாத பல விஷயங்களை இந்த படத்தில் அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். இப்படத்தை தயாரித்த பா. ரஞ்சித்திற்கு ஒரு சபாஷ் போடலாம். சமுத்திரக்கனியுடன் சேர்ந்து கவிதா பாரதியும் நடித்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :