• JUST IN | சுட சுட

தமிழக அரசு புதிய கட்டுப்பாடு! 6-ம் தேதி முதல் அதிரடி!





தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மே 6-ம் தேதி காலை 4 மணி முதல் மே 20-ம் தேதி காலை 4 மணி வரை இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவதாக தமிழக அரசு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் வெளியாகியுள்ள புதிய கட்டுப்பாடுகள்:

அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவிகித இருக்கையில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

3,000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. இவை தவிர தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள் பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம்போல எந்த தடையுமின்ற செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதி. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள அனுமதியில்லை.

மாநகராட்சி நகராட்சிப் பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

வீதியிலும் நடை மேடைகளிலும் எங்கும் பீடி சிகரெட் பிடிப்பவர்களுக்கும கண்ட இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கும் எந்த தடையும் இல்லீங்களா..? அடக்கடவுளே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :