• JUST IN | சுட சுட

இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்: சுட்டெரிக்கும் கத்திரி வெயில்!! உஷார்!





அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று முதல் (மே 4) தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே- 28 வரை நீடிக்கும்.

வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின்போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷ்ணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, கத்திரி வெயில் காலத்தில்தான் மிக அதிக வெப்பம் உணரப்படுவது வழக்கம்.

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவதியில் இருக்கும் மக்கள் தற்போது கத்திரி வெயிலின் வீரியத்தையும் சகித்தாக வேண்டும். பொதுவாக, வீடுகளில் சூடு அதிகமாக இருந்தால், மாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே நடந்து வருவது வழக்கம். இந்த கொரோனா காலத்தில் அதுவும் செய்ய முடியாது என்பதால், கத்திரி வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக காணப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயிலின் அளவு உச்சத்தைத் தொட்டு வருகிறது.

எனினும், கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாலும், பல அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதாலும், சாலைகளில் வெயிலின் நேரடி தாக்கத்துக்கு ஆளாவதை மக்கள் தடுக்க முடியும்.

இதற்கிடையில், ஒரு வார காலம் முன்பு தமிழகத்தில் கோடை மழையும் பெய்ததால், வெப்பம் சற்று கட்டுக்குள் இருந்தது. எனினும், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :