• JUST IN | சுட சுட

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: சீரம் அதிகாரி பகீர்!





இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டி வரும் வேளையில், சில மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும் என, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

`நாடு முழுவதும் 18 முதல் 44 வயதினருக்கு மே 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்` என, பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், `தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை` என, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்ததாவது:

இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :