• TRENDING | பர பர

வெற்றி சான்றிதழைப் பெற இரு சக்கர வாகனத்தில் சென்ற ரங்கசாமி!





என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி தான் வெற்றி பெற்ற சான்றிதழைப் பெற தனது இருசக்கர வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றது வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் நடந்துவந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் ஆளுங்கட்சியில் அதிருப்தி ஏற்பட, ஒவ்வொரு எம்.எல்.ஏ.வாக பா.ஜ.வில் ஐக்கியமாகி வந்தனர். இந்நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை மெஜாரிட்டியை இழந்தது. இதனால், புதுச்சேரியில் சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மொத்தம் 30 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், 16 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனித்து ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ. - அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் -16; பா.ஜ. - 9 அ.தி.மு.க. - 5 தொகுதியிலும் போட்டியிட்டன.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி நடந்தது. இறுதியில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும் பா.ஜ. ஆறு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ. கூட்டணி ஆட்சி அமைகிறது.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமி தான் வெற்றி பெற்ற சான்றிதழைப் பெறுவதற்காக, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :