• JUST IN | சுட சுட

தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி!





தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பறிகொடுத்தது. இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 7-ம் தேதி கவர்னர் மாளிகையில் எளிய முறையில் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தோல்வி அடைந்ததால், தனது முதல்வர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சேலத்திலிருந்து அனுப்பியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :