• TRENDING | பர பர

முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து!





தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து, தமிழக முதல்வராக முதல் முறையாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளார்.

நேற்று நள்ளிரவே, திமுக தலைவர் ஸ்டாலின், தனது வெற்றி சான்றிதழை கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றதோடு, பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, திமுக அறிவித்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையன்று பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார் ஸ்டாலின். மு.க. ஸ்டாலின் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

-இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானின் ட்வீட்டுக்கு மு.க.ஸ்டாலின்,ரீட்வீட் செய்துள்ளார்.

தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என்று கூறியதோடு, தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

-இவ்வாறு ஸ்டாலின் ரீட்வீட் செய்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :