• TRENDING | பர பர

தமிழக சட்டமன்றத்தில் மலர்ந்தன 4 தாமரைகள்!





நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், 20 ஆண்டுகளுக்குப் பின் பாஜக 4 இடங்களில் அமோக வெற்றி பெற்றதன் மூலம், மீண்டும் தமிழகத்தில் தாமரை மலர்ந்துள்ளது.

அதிமுக கூட்டணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில் 4 தொகுதிகளில் பாஜக அசாத்திய வெற்றி பெற்றுள்ளது. அதுவும் கடந்த 20 வருடங்களாக தமிழக சட்ட மன்ற தேர்தலில் தாமரை வெற்றி பெறவில்லை. முன்னதாக 1996ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக ஒரு இடத்திலும், அதனையடுத்து 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்து பாஜக 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதே, தமிழகத்தில் அவர்களின் கடைசி வெற்றியாக இருந்தது.

இந்நிலையில், மத்தியில் பலம் வாய்ந்த கட்சியாக திகழும் மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்த முறை 20 இடங்களில் போட்டியிட்டது.

அதில் பாஜக சார்பாக கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், நாகர்கோவில் தொகுதியில் எம்.ஆர்.காந்தி, திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் சரஸ்வதி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தாமரை தமிழகத்தில் மலர சாத்தியமில்லை என்று திமுகவைச் சேர்ந்தவர்கள் உட்பட பல கட்சிகளும் சொல்லிவந்த நிலையில், தாமரை சின்னத்துடன் 4 பேர் சட்டமன்றத்திற்குள் நுழைவது பலரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :