• JUST IN | சுட சுட

மத்திய பிரதேசம்: கும்பமேளா சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கொரோனா!





மத்தியப் பிரதேசத்திலிருந்து கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசின் தகவல் வெளியாகியுள்ளது..

கொரோனா 2-ம் அலை பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கும்பமேளா மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டங்கள் எனக் கூறப்படுகிறது. ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் ஏராளமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த விழாவுக்கு நாடெங்கும் இருந்து பல லட்சக்கணக்கானோர் சென்றிருந்ததால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அச்சம் எழுந்தது. அதை நிரூபிப்பது போல் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது.

கும்பமேளாவில் கலந்துக் கொண்டு திரும்பி வந்தவர்களில் 99% பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இவர்கள் தற்போது தனிமையில் வைக்கபட்டுள்ளனர். டெல்லியிலிருந்தும் ஏராளமானோர் கும்பமேளா சென்று திரும்பி வந்துள்ளனர். அங்கு சென்று திரும்பி வருவோர் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் இஒருக்க வேண்டும் என்பது டெல்லியில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதே அச்சம் குஜராத்தில் நிலவுவதால் அங்கும் கும்பமேளா சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

Comments

M.Kothandapani says :

இது என்ன கும்பமேளாவா... இல்ல கொரானாமேளாவா? சொல் பேச்ச கேட்கறதுதான் நம்மாளுங்களுக்கு பழக்கமே இல்லையே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :