• JUST IN | சுட சுட

தேர்தல் வியூக நிபுணர் பணியை கைவிடுகிறேன்: பிரஷாந்த் கிஷோர் அறிவிப்பு!





பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் தமது பணியை கைவிடுவதாக அறிவித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் திமுகவுக்கும் மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரசுக்கும் வெற்றிகரமாக தேர்தல் வியூகங்களை வகுத்தளித்தது பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். இந்த இரு மாநிலங்களிலும் அவரது வியூகம் வெற்றுபெற்று தமிழகத்தில் திமுக-வும், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் பிரஷாந்த் கிஷோர் தான் தேர்தல் வியூகப் பணியிலிருந்து விலகுவதாக அறிவ்த்திருக்கிறார். மேலும் தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவின் ஒரு அங்கமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அலர் அளித்த பேட்டி:

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி வெற்றிபெற்று விட்டாலும் அது எளிதாக கிடைத்துவிடவில்லை என்றும் பாரதிய ஜனதா கடும் போட்டி தந்ததாகவும் பிரஷாந்த் கிஷோர் கூறினார். மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா இரட்டை இலக்கத் தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்காது என கடந்த டிசம்பர் மாதம் கூறியது உண்மையாகிவிட்டதாகவும் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

Comments

M.Kothandapani says :

ஐயா, அடுத்த பார்லிமெண்ட் எலெக்‌ஷன்ல காங்கிரசுக்கு உதவி பண்ணிட்டு உங்கள நீங்க பேக் பண்ணிக்க கூடாதா? கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க....

கேஆர்எஸ் சம்பத் says :

இவர் எப்படி வியூகம் அமைத்தார் .. என்னென்ன வியூகம்? அது எப்படி செயல்பட்டது என்று எவராவது எழுதினால் விவரமாக படிக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :