• JUST IN | சுட சுட

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகிற 7-ம் தேதி பதவியேற்பு!





தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற வெள்ளிக்கிழமையன்று (மே- 7) பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் த்மிழக முதல்வராக பதவியேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 70-ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின்னர் வெற்றி சான்றிதழை எடுத்துக்கொண்டு மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திமுக கூட்டணி வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கொரோனா நோய் பரவல் காரணமாகப் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்.

-இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

Comments

M.Kothandapani says :

ஸ்டாலின் தான் வர்றாரு.... கொரோனா நிதியுதவி தரப் போராரு......

கேஆர்எஸ் சம்பத் says :

ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் முதல்வராய் இருக்க வாழ்த்துக்கள்.

ஆா்.நாகராஜன் says :

மக்கள் உங்கள் மீது முழு நப்பிக்கை வைத்து உங்களை தோ்வு செய்து ஆட்சி அதிகாரத்தில் அமரவைத்துள்ளாா்கள் வீரமணி திருமா போன்றவா்களின் பிராமண துவேக்ஷ கொள்கையை ஆதாிக்காமல் சமதா்ம சமுதாயம் படைக்க வாருங்கள் மாண்புமிகு முதல்வா் அவா்களே பிராமணா்களும் உங்களுக்கு வாக்களிதுள்ளாா்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :