• TRENDING | பர பர

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட மனிதக்குரங்கு திரைப்படம்! யூடியூபில் வெளியான சிறப்பு காட்சி!





ஹாலிவுட் படங்களில் மட்டுமே நாம் கண்டு வியந்த பிரம்மாண்ட காட்சிகள், இப்போது தமிழ் சினிமாவிலும் வந்து விட்டது. முதன்முறையாக ராட்சத மனித குரங்கை சூப்பர் ஹீரோவாக கொண்ட ‘கபி’ என்ற திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

பொதுவாக பிரம்மாண்ட உருவத்தில் விலங்குகளை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களை ஹாலிவுட்டில் நாம் நிறையவே பார்த்திருப்போம். உதாரணத்திற்கு ஜூராசிக் பார்க், காட்ஸில்லா, கிங்காங், ராம்பேஜ் என அனைத்து படங்களிலும் பெரிய உருவம் கொண்ட விலங்குகள் வந்து அதகளப்படுத்துவதை ஹாலிவுட் படங்களில் பார்த்து வியந்திருப்போம்.

இதுவரையிலும் இது எல்லாம், ஹாலிவுட்டில் தான் சாத்தியம் என்று பலரும் நினைத்துவந்த நிலையில், இந்தியாவில், அதுவும் தமிழ் தயாரிப்பாளர்களின் உருவாக்கத்தில் ஒரு பிரம்மாண்ட மனித குரங்கு சூப்பர் ஹீரோ திரைப்படம் விரைவில் உருவாக இருக்கிறது.

இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராதா, ராம நாரயணன் மற்றும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள். ’கபி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் வேறலெவலில் உருவாகி வருகிறது. இதற்கான சிறப்பு காட்சி ஒன்று தற்போது யூடியூபில் வெளியாகி பிரம்மாண்டப் படுத்தியுள்ளது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=SSMyRKwKCd0




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :