• TRENDING | பர பர

சர்வதேச நியூ டைரக்டர்ஸ் திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘கூழாங்கல்’!





காதல் ஜோடிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்த நிலையில், சமீபத்தில் ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தின் உரிமையையும் கைப்பற்றினர்.

பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு, யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த கூழாங்கல் திரைப்படம் ஏற்கெனவே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட இந்தியாவிலிருந்து தேர்வான ஒரே படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவிற்கு சென்ற ரவுடி பிக்சர்ஸ் குழு பாரம்பரிய உடையணிந்து அசத்தினர். அப்புகைப்படமும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘கூழாங்கல்’ திரைப்படம் நியூ டைரக்டர்ஸ் திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியுள்ளது திரைப்படக் குழுவிற்கு மேலும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :