• JUST IN | சுட சுட

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்தியஅமைச்சரவை கூட்டம்!





பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரேனா பரவல் தடுப்பு குறித்தும், மருந்துகள் பற்றாக்குறை, தடுப்பூசி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை சூறாவளி வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நோயாளிகளின் அதிகரித்து வருவதுடன், அவர்களின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமாக தேவைப்படும் ரெம்டெசிவிா் மருந்து, மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு பல மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதை போக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்தாலும் சில மாநிலங்களில் பற்றாக்குறை தொடர்ந்து. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று பிரதமா் தலைமையில் மத்திய அமைச்சா்கள் குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற உள்ளது. இது கொரோனா பாதிப்பின் 2-ம் அலை பரவலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :