• JUST IN | சுட சுட

பாலியல் புகார்: ரொனால்டோவிடம் ரூ.580 கோடி இழப்பீடு கேட்ட மாடல் அழகி!





போர்ச்சுக்கல்லின் புகழ்பெற்ற கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர் கடந்த 2009-ம் ஆண்டு கேத்ரின் மயோர்கா எனும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கேத்ரின் மயோர்கா தெரிவித்ததாவது:

2009-ல் ரொனால்டோ எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதை வெளியில் சொல்லக் கூடாது என்பதற்காக பணம் தருவதாக ஒப்பந்தம் செய்தார். ஆனால் பணம் எதுவும் தரவில்லை. எனவே அவர்மீது வழக்கு தொடர முடிவு செய்தேன்.

-இவ்வாறு மயோர்கா குற்றம் சாட்டியிருந்தார்.

மயோர்கா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மீண்டும் மயோர்கா இது குறித்து பேசியுள்ளார். ரொனால்டோ தனக்கு 580 கோடி இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ரொனால்டோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும், தனது எதிர்காலமே பாழானதால், நஷ்டஈடாகவும் இந்த தொகையை கேட்பதாக மயோர்கா தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :