• JUST IN | சுட சுட

இனி இந்த பொருள்களுக்கு எல்லாம் இந்தியாவில் தடை: மத்திய அரசு அதிரடி!





பிற நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா பெரும்பாலும் இறக்குமதியையே சார்ந்திருக்கிறது. இதனால் மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி இறக்குமதியைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் மத்திய அரசு, ஊக்க சலுகைகளை அனைத்துத் துறைகளுக்கும் வழங்கி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்படி கூறியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் குறைந்த விலைக்குப் பொருட்கள் கிடைப்பதால் அவற்றை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க இறக்குமதித் தடைகளை அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில், கொசு அடிக்கும் பேட்கள் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்ததால் அதற்கு மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. மேலும்,

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

அந்நிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் 121 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட கொசு அடிக்கும் பேட்களை இந்தியாவில் இறக்குமதி செய்யத் தடை செய்யப்படுகிறது. 121 ரூபாய்க்கு மேல் உள்ள பேட்களை மட்டும் தான் இனி இறக்குமதி செய்ய முடியும். மேலும் தர்பூசணி விதைகளை இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு தர்பூசணி விதைகள் இலவச வர்த்தகப் பிரிவின் கீழ் இருந்தது. இனி இவற்றை இலவசமாக இறக்குமதி செய்ய முடியாது, அதற்கு அந்நிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகத்திடம் உரிமம் பெற வேண்டும்

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி குறைவதால் இந்த பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Comments

கதிர் says :

சைனா நாட்டிலிருந்து கொரானாவையே இறக்குமதி பண்ணியாச்சு.... இதெற்கெல்லாம் தடை விதிச்சு என்ன பண்றது..

D.vijayslakshmi says :

I am very oldest fan of Mangaiyar malar Malar Proofs old is gold!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :