• JUST IN | சுட சுட

BREAKING: பிரபல சினிமா இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார். திரையுலகம் கண்ணீர்!





சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு சில மாதங்கள் குறைந்து பின்னர் கடந்த சில நாட்களாக கொரோனா 2-ம் அலையாக தீவிரமாக கடந்த அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (54) இன்று காலமானார். கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தா கே.விஆனந்த, இன்று அதிகாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

கெ.வி.ஆனந்த் அயன், மாற்றான், கவன், காப்பான், கோ, அனேகன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :