• JUST IN | சுட சுட

கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மரணம்!





கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார்.

வருகிற ஜூன் 1ந்தேதியுடன் 14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது. இதனால், கடந்த 6ந்தேதி கேரள சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. 14 மாவட்டங்களை உள்ளடக்கிய கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2ந்தேதி நடைபெறும்.

இந்த தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்டு, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவியது. ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.

அந்த கட்சியின் நிலாம்பூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வி.வி. பிரகாஷ் போட்டியிட்டார். அவர், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து உள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :