• JUST IN | சுட சுட

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்? - தலைமைச்செயலர் இன்று ஆலோசனை!





தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுபாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்பை விட கொரோனாத்தொற்று வேகமாக பரவி வருகிறது.

ஆகையால், அதனைத்தடுக்கும் வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களை கேட்டறிந்து கூடுதல் கட்டுப்பாடு பற்றிய முடிவுகளை தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சன் எடுப்பார் எனத் தெரிகிறது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டிஜிபி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Comments

M.Kothandapani says :

தண்டனைகள் கடுமையானாதான் குற்றங்கள் குறையும்னு சொல்றா மாதிரி கட்டுப்பாடுகள் அதிகமானாதாங்க நோய் தொற்று எண்ணிக்கையும் குறையும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :