• JUST IN | சுட சுட

தடுப்பூசி போட்டால் முகக்கவசம் தேவையில்லை: அமெரிக்கா அறிவிப்பு!





அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது:

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லலாம். மேலும் சிறு குழுக்களாக கூடும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. ஆனால் சலூன் கடைகள், அருங்காட்சியகம், சினிமா திரையரங்கம் போன்ற இடங்களுக்குச் செல்பவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் எ

-இவ்வாறு அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க மக்களில் சுமார் 30 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக இந்த மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Comments

M.Kothandapani says :

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலேயே 30 சதவிகிதம் பேர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள் என்பது ஆச்சரியமான செய்தி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :