• JUST IN | சுட சுட

டெல்லி: மயானங்களில் வரிசையாக ஆம்புலன்ஸில் காத்திருக்கும் சடலங்கள்!





டெல்லியில் கொரோனா 2-ம் அலை தீவிரமாக வேகமெடுத்துள்ளதால், கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறந்தவர்களீன் உடல்களை எரிக்கவோ அடக்கம் செய்யவோ இடமின்றி, மயானங்களில் வரிசையாக ஆம்புலன்ஸ்களில் சடலங்கள் வரிசைகட்டி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் சுமார் 300 பேர் இறப்பதால் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட இடமில்லாமல் டெல்லியில் மயானத்திற்கு வெளியே உடல்களை நீண்ட வரிசையில் வைக்கப்பட்டு அதற்கு அருகில் உறவினர்கள் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அதனால் உடல்களை ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் முன்பு தகனம் செய்யும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

Comments

M.Kothandapani says :

சிவ.... சிவா.... ஆறடி நிலம் கூட சொந்தமில்லாத இந்த அவலத்தை என்னன்னு சொல்றது......மனசுக்கு ரொம்ப வேதனைதான்.....

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :