• TRENDING | பர பர

‘ஜகமே தந்திரம்’ படத்தின் நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு!





‘கர்ணன்’ வெற்றிப்படத்தைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த படம் எப்போது ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்துவந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கடந்தாண்டு மே மாதமே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளிப் போனது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இப்படம் ஓடிடி அல்லது தியேட்டர் இரண்டில் எதில் வெளியாகும் என விவாதங்களும் நடந்துகொண்டிருந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

கார்த்திக் சுப்புராஜ், தனுஷ் இருவரின் கூட்டணி என்பதால், இப்படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், ‘ஜகமே தந்திரம்’ வரும் ஜுன் 18 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது, தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :